அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

59 / 100

சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிஜிஆர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக அண்ணாமலையும், அமைச்சரும் ட்விட்டரில் மாறி மாறி கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அதில், ” எண்ணூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தை விரிவாக்கம் செய்ய கடந்த வருடம் உத்தரவிட்டப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண உத்தரவிட்டது.

அண்ணாமலையிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

இதன் உண்மை நிலை அறியாமல், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக ட்விட்டர் மூலம் அண்ணாமலை கருத்துக்களை வெளியிட்டார்.

ரூ. 500 கோடி நஷ்ட ஈடுஅண்ணாமலையின் கருத்து தங்கள் நிறுவனத்தின் புகழை கெடுப்பதோடு, மக்களிடையே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களுடனான உறவை துண்டித்துள்ளது.

எனவே தவறான தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அண்ணாமலை மற்றும் சிவக்குமார் ஆகியோர் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக 10 நாட்களுக்குள் எங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தகவலை உடனடியாக நீக்க வேண்டும், தங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆடுகள் மட்டும்தான்!

இந்த நோட்டீஸுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அண்ணாமலை, “சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*