அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா...?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அண்ணா அறிவாலயம் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள், அங்கு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒருபுறம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 63வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு சககட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

இதையடுத்து, திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ஆதரவாளர்களுடன், அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று, மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூற சென்றார்.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

அப்போது, அறிவாலயத்திற்குள் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களை நுழைய விடாமல், வெகுநேரம் காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கோபமடைந்தார்.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

இதையடுத்து, பொறுமையை இழந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால், அண்ணா அறிவாயத்தில் சற்று அசாதாரண சூழ்நிலை நிலவியது.

மேலும், 2016 தேர்தலிலும், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் திமுக எங்களுடன் கூட்டணி வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் சமுதாய மக்களின் வாக்குகளை பெற்று பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது, எங்கள் தலைவரேயே வெளியில் நிக்க வைக்கிறியா மு.க.ஸ்டாலின்… உனக்கு இந்த தேர்தலில் கெட்டகாலம் தொடங்கிடுச்சு, என குரல் எழுப்பினர்.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

இதையடுத்து, போலீசார் பிரச்சனையை சரிசெய்தனர். அதேநேரத்தில், அண்ணா அறிவாலயத்தின் உள்ளே இருந்து அழைப்பு வந்தது. இதனால், தொல்.திருமாவளவன் உள்ளே சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு திரும்பினார்.

இந்தநிலையில், திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு, சொந்த சின்னத்தில் போட்டியிட தடை உள்ளிட்ட நெருக்கடிகளால் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி நீடிக்குமா..? என்ற சூழல் நிலவி வருகிறது.

அண்ணா அறிவாலய கண்ணாடிகளை அடித்து உடைத்த வி.சி.க தொண்டர்கள் : திமுக, வி.சி.க உறவில் விரிசலா…?

இப்படியிருக்க, இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அலுவலகத்தை அக்கட்சியினர் சேதப்படுத்திய சம்பவம், இரு கட்சிகளிடையே மேலும் விரிசலை உண்டாக்கியிருக்கிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*