அதிமுகவின் கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் ; திமுகவுடன் கூட்டணி!

அதிமுகவின் கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் ; திமுகவுடன் கூட்டணி!

கருணாஸை தொடர்ந்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் ; திமுகவுடன் கூட்டணி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, இ.கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், விசிக கட்சிக்கு 6 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள், இ.கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தி.மு.க கூட்டணியில், தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

அதிமுகவின் கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் ; திமுகவுடன் கூட்டணி!

இந்நிலையில், தமிமுன் அன்சாரி வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இந்த முறை திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளது.

அதிமுகவின் கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் ; திமுகவுடன் கூட்டணி!

இதையடுத்து, அதிமுகவை எதிர்க்கும் எந்த கட்சியாக இருந்தாலும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் திமுக, தற்போது, கருணாஸிடம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.

இதையடுத்து, முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவு கடிதத்தை கொடுத்திருக்கிறார். இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*