அதிமுகவின் 171 வேட்பாளர்கள்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

அதிமுகவின் 171 வேட்பாளர்கள்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

அதிமுக ஏற்கெனவெ ஆறு நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. தற்போது 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம் 177 இடங்களில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் 171 வேட்பாளர்கள்:  3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.தாமோதரன், நத்தம் விசுவநாதன், கு.ப.கிருஷ்ணன் பரஞ்ஜோதி, வைகைச் செல்வன், இசக்கி சுப்பையா, பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, சின்னய்யா, வி.சோமசுந்தரம், கே.பி.முனுசாமி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கே.வி.ராமலிங்கம், ஏ.கே.செல்வராஜூக்கு ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் 171 வேட்பாளர்கள்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை

அதேபோல தற்போது அமைச்சரவையில் இருக்கும் 30 பேரில் 27 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் முன்பு போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிடுகின்றனர். மூன்று பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகிய மூவருக்கும் இம்முறை வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*