அதிமுகவுக்கு உன் ஓட்டு: உன் வாங்கி கணக்கில் காசு

அதிமுகவுக்கு உன் ஓட்டு: உன் வாங்கி கணக்கில் காசு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அனைவருடனும் ஆலோசனை நடத்தினார்.

அதிமுகவுக்கு உன் ஓட்டு: உன் வாங்கி கணக்கில் காசு

அதில் திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ, தலைமைக் கழக வழக்கறிஞர்கள் வி. அருண், ஆர். நீலகண்டன், ஜெ. பச்சையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக சில கோரிக்கைகளை முன்வைத்தது.

அந்தக் கோரிக்கைகள் தற்போது செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு உன் ஓட்டு: உன் வாங்கி கணக்கில் காசு

அதிமுகவினர் சார்பில் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிற பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வருவாய்த் துறை அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டு புகார் கொடுக்க மறுக்கின்றனர். அதனால், திமுக சார்பில் கொடுக்கும் புகார்கள் மீது, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்திட வேண்டும்.

அதிமுகவினர் சார்பில் வாக்காளர்களுக்கு இலவசப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை முழுவதும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுகவுக்கு உன் ஓட்டு: உன் வாங்கி கணக்கில் காசு

அனைத்து வங்கிகளின் பணப் பரிமாற்றத்தை முழுவதுமாகக் கண்காணிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்காக, ஆளும் கட்சியினரால் வங்கிக் கணக்கு புத்தக நகல் பெறப்பட்டுள்ளது. ஆகவே, வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறதா என்பதை முழுவதுமாகக் கண்காணிக்க வேண்டும்.

வாக்குப் பதிவு முழுவதும் இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்படும் என்ற முடிவினை மாற்றி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*