அதிமுகவை களங்கப்படுத்த திமுக முயற்சி: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

64 / 100

பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

அதிமுகவை களங்கப்படுத்த திமுக முயற்சி: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

கோவையில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏவுக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 52 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறைகேடாக டெண்டர் ஒதுக்கி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று தீவிர சோதனை நடத்தி வருகிறது.சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவையில் வங்கி முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவை களங்கப்படுத்த திமுக முயற்சி: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. நீதிமன்றம் இருக்கும் போது காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த திமுக முயற்சி நடக்கிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*