அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

அதிமுக, அமமுக இரண்டும் ஒன்றிணையும் என்ற செய்தி விரைவில் வெளிவரும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு தெரிவித்துள்ளார்.

அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்துவரும் சசிகலாவை ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்றிலிருந்து அரசியல் கட்சியினரும், தலைவர்களும், நலம் விரும்பிகளும், திரைபிரபலங்களும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

மேலும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், லிங்குசாமி மற்றும் நடிகர் பிரபு ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

இந்நிலையில், இன்று மாலை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான உ.தனியரசு, சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உ.தனியரசு, அதிமுக- பாஜகவுக்கு இடையே உள்ள உறவு, நிச்சயம் அதிமுகவுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும், நிர்வாக ரீதியில் மட்டும் பாஜகவுடன் அதிமுக உறவு வைத்துக்கொள்ளலாம்,

அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

ஆனால், அனைத்து திட்டங்களையும் தொடங்கிவைக்க அமித்ஷாவையும் மோடியையும் அழைப்பது தவறு. அதிமுக, அமமுக இணைவது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும், சசிகலா ஒரு பெண்ணாக நிறைய சவால்களை சந்தித்துள்ளார். ஆனால், தற்போதும் மன உறுதியுடன் நலமாக இருக்கிறார்.

அதிமுக, அமமுக விரைவில் இணையும்: சசிகலாவை சந்தித்த பின் உ.தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

தற்போது, அதிமுக ஆட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், கட்சிக்குள் குளறுபடி இருக்கிறது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு தரவேண்டும் என்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்றார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*