அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 199 பேர் மீது வழக்குப்பதிவு: எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூட்டம் கூடியதாக வழக்கு..!

67 / 100

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று சோதனை நடந்த போது அதற்கு இடையூறு செய்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 199 பேர் மீது வழக்குப்பதிவு: எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூட்டம் கூடியதாக வழக்கு..!

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவரது நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 199 பேர் மீது வழக்குப்பதிவு: எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூட்டம் கூடியதாக வழக்கு..!

இந்தசோதனையில், பலரது வீடுகளிலும் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டிலும் எந்த ஆவணமும்  கைப்பற்றப் படவில்லை என்றும் ஒரே ஒரு பெட்டக சாவி மட்டும் எடுத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 199 பேர் மீது வழக்குப்பதிவு: எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூட்டம் கூடியதாக வழக்கு..!

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த கோவை அதிமுக எம்எல்ஏ.,க்கள் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.

இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டத்திற்கு புறம்பாக கொரோனா தொற்றை பரப்பும் கூடுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், டி.கே.அமுல் கந்தசாமி, MSM.ஆனந்தன், கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ் மற்றும் கஸ்தூரி வாசு உட்பட 187 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 199 பேர் மீது வழக்குப்பதிவு: எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் கூட்டம் கூடியதாக வழக்கு..!

மேலும், அதிமுகவினர் 12 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*