அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!

அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!

சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.

அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று 171 அதிமுக வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அந்த பட்டியலில் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் இடம்பெறவில்லை. அதில் ஒருவர் தான் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதலில் ஈடுபட்டு வந்த ராஜவர்மன், டிடிவி தினகரனை சந்தித்தது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. இந்தநிலையில், டிடிவி.தினகரன் முன்னிலையில் ராஜவர்மன் அமமுகவில் இணைந்து கொண்டார்.

அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், அதிமுகவில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை, கட்சிக்காக உழைப்பவர்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால், எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எந்தது வேதையளிக்கிறது. சசிகலாவிற்கு இவர்கள் செய்த துரோகத்திற்கு மக்கள் மன்றத்தில் உரிய பதில் கிடைக்கும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார், ஒருநாள் உண்மை வெளிவரும் என ஆவேசமாக பேசினார். அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைத்துக் கொண்ட அதிமுக நிர்வாகிகள் பட்டியல்

அதிமுக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்…!
About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*