அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்:சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்: சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அப்போதே முதல்வர் எடப்பாடியிலும், துணை முதல்வர் போடிநாயக்கனூரிலும் தங்களது ஆஸ்தான தொகுதியான முறையே போட்டியிட மனு கொடுத்தார்.

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்:சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

இதைத்தொடர்ந்து, அதிமுக அமைச்சர்கள், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளார்கள். முதல் நாளிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களைக் கொடுத்துள்ளனர்.

மறுநாளில் சுமார் 2 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் வழங்கினார்கள். நேற்று இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 700ஐ தாண்டியிருந்தது. இன்றும் ஏராளமானோரிடமிருந்து மனுக்கள் வரப்பெற்றன. மேலும், தற்போதைய நிலவரப்படி சுமார் 5 ஆயிரம் பேர் வரை விருப்ப மனுக்கள் கொடுத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்:சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

இதையடுத்து, பெறப்பட்ட விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த சனிக்கிழமைக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*