அதிமுக தேர்தல் அறிக்கை: விலையில்லா வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி…விலையில்லா கேபிள் டி.வி இணைப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை: விலையில்லா வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி...விலையில்லா கேபிள் டி.வி. இணைப்பு
vengai vetri

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக வெளியிட்டனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை: விலையில்லா வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி...விலையில்லா கேபிள் டி.வி இணைப்பு
vengai vetri

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, கட்சிகளுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளில் கவனம் செலுத்திவந்தன. இந்தநிலையில், திமுக, அமமுக  தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

இந்தநிலையில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே, தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை: விலையில்லா வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி...விலையில்லா கேபிள் டி.வி இணைப்பு
vengai vetri

அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்:

1. அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

2. அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.

3. வீட்டில் ஒருவருக்கு அரசு பணி

4. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

5. விலையில்லா கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படும்

6. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை

7. தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்

8. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை.

9. மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்

10. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்

அதிமுக தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கை

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*