அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி: அமித்ஷா தமிழகம் வருகை

அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி: அமித்ஷா தமிழகம் வருகை

தமிநாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், மூன்றாவது அணியாக களமிறங்கியிருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு விநியோகம், வேட்பாளர்களுக்கான நேர்காணல் உள்ளிட்டவற்றில் படுபிஸியாக இருக்கிறார்கள்.

அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி: அமித்ஷா தமிழகம் வருகை

திமுக சர்ர்ப்பில் முதன் முறையாக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் மு.க.ஸ்டாலின், எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் மீண்டும் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி, தன் மொத்த திறமையை இறக்கி அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக, அதிமுக மத்திய பாஜக அரசின் உதவியுடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல், அவ்வப்போது தமிழகம் வரும் பாஜக தலைவர்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கின்றனர்.

அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி: அமித்ஷா தமிழகம் வருகை

இந்நிலையில், கடந்த மாதம் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட அமித்ஷா, தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 7ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்தநிலையில், காலை 10 மணிக்கு சுசீந்திரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அமித்ஷா, 10.45 மணிக்கு வெற்றிக்கொடியேந்தி வெல்வோம் என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் தொடங்கி, பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி: அமித்ஷா தமிழகம் வருகை


மேலும், மதியம் 12 மணியளவில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். மதியம் 2 மணிக்கு கேரளா திருவனந்தபுரம் செல்கிறார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*