அதிமுக ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பதுக்கல்: பரிசுப்பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த திமுகவினர்.

தமிழ்நாட்டில் தேர்தல் குறித்த அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்விதியின்படி பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என எதையும் வாக்காளார்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. இந்தநிலையில், அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஊட்டியில் அதிமுகவால் களேபரம் சிறப்பாக தொடங்கியது.

அதிமுக ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பதுக்கல்: பரிசுப்பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த திமுகவினர்.

அதிமுகவினர் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, பரிசுப் பொருட்களை வழங்கினர். ஊட்டி டம்ளர் முடக்கு பகுதியில் பரிசுப்பொருட்கள் வழங்கியபோது, திமுக ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, இதை முன்னிறுத்தி சாலை மறியலும் நடத்தினர். இவ்விவகாரத்தின் பிரச்சனை இருக்கையில், தற்போது, வால்பாறையிலும் மற்றுமொரு சம்பவத்தை அதிமுகவினர் அரங்கேற்றி உள்ளனர்.

அதிமுக ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் பதுக்கல்: பரிசுப்பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த திமுகவினர்.

வால்பாறையை அடுத்த பாறைமேட்டில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.1கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களை அதிமுகவினர் பதுக்கிவைத்துள்ளனர். இதைப்பற்றி எப்படியோ தெரிந்துகொண்ட திமுகவினர், 3 வீடுகளில் அதிமுகவினரின் பதுக்கி வைத்திருந்த பரிசுப்பொருட்களைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் திமுகவினர் ஒப்படைத்தனர்.

இதற்கு முன்னதாக தேர்தல் அறிவிப்புக்குமுன் கோவையில் யாருமே இல்லாத வீட்டின் கேட்டில், பரிசுப்பொருட்களை அதிமுகவினர் தொங்கவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*