அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

அமமுகவின் சார்பில் நேற்று ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையில், அம்மா பொருளாதார புரட்சித்திட்டம் என்ற பெயரில், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, விவசாயிகளுக்கு வீடுதேடிவரும் உரம், என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

இன்னும் சிறப்பாக மாதம் ஒரு மாவட்டத்தில், முதலமைச்சர் நேரடியாக சென்று பங்கேற்கும், மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மாதம் 4 முறை அந்த தொகுதி எம்.எல்.ஏ பங்கேற்கும் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அமமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை
அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

மேலும், அம்மா கிராமப்புற வங்கிகள் ஏற்படுத்தப்படும், சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான வட்டியில்லா கடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும், அம்மா கிராமப்புற வங்கிகள் ஏற்படுத்தப்படும்.

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை

சமூகத்தில் மதிப்புமிக்கவர்களும், பல்வேறு துறை வல்லுநர்களும் ஆட்சியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி, சனநாயகத்தை மேலும் வலுப்படுத்த உதவும் வகையில், தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும் என அமமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமமுகவின் முழு தேர்தல் அறிக்கை தமிழ்

AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM ELECTION MANIFESTO

“வாக்காளரும் வேட்பாளரும்”

உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*