அமமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் – டிடிவி தினகரன்

அமமுக

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக முதற்கட்டமாக 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, இந்தநிலையில், இன்று காலை 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

அமமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் – டிடிவி தினகரன்

அதிமுகவிற்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் அமமுக, சசிகலா தலைமையில் தேர்தலை சந்திக்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால், சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிக்கை வெளியிட்டு டிடிவி.தினகரனுக்கே அதிர்ச்சியை கொடுத்தார். சசிகலா விலகினாலும் அமமுக தேர்தலில் போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்த டிடிவி தினகரன். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார்.

அமமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் – டிடிவி தினகரன்

இந்தநிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை நாங்கள் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

அமமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் – டிடிவி தினகரன்

மேலும், இன்னும் சில கட்சிகள் அமமுக கூட்டணியில் இணையும் என டிடிவி தினகரன் சொல்வது தேமுதிகவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*