அமமுக கூட்டணியில் தேமுதிக ? -டிடிவி தினகரன்

அமமுக கூட்டணியில் தேமுதிக ? -டிடிவி தினகரன்

அதிமுகவிலிருந்து விலகிய தேமுதி, அமமுக கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

அமமுக கூட்டணியில் தேமுதிக ? -டிடிவி தினகரன்

அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த தேமுதிக, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் அந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், திடீரென கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது வேறு கட்சிகளோடு கூட்டணி அமைக்குமா? என்பதுதான் தற்போது அரசியலில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.

அமமுக கூட்டணியில் தேமுதிக ? -டிடிவி தினகரன்

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுக தேர்தல் அறிக்கை வரும் 12ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம். அதிமுகவின் ஏமாற்று அறிவிப்புகளை கண்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். பல கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். இறுதியானதும் தெரிவிக்கிறோம் எனக் கூறினார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*