அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்..!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்..!

அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்..!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒழிக்கும் விதமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்நாளில் மட்டும் சுமார் 1.25 லட்சம்பேர் கொரோனா தடுப்பூசி ஊசி போட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்..!

இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டுக் கொண்டார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழையும், அவர் மருத்துவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

கடந்த சில நாட்களாகவே துணை முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*