அம்மா ஆட்சி அமைக்கவே அமமுக தோன்றியது -டிடிவி தினகரன்

அம்மா ஆட்சி அமைக்கவே அமமுக தோன்றியது -டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு என மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அமமுக மட்டும் எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. இதுவரையில் அமமுகவில் விருப்ப மனு விநியோகம் பெறும் பணிகூட நிறைவடையவில்லை.

அம்மா ஆட்சி அமைக்கவே அமமுக தோன்றியது -டிடிவி தினகரன்

இந்தநிலையில், சசிகலா அரசியலில் இருந்து விளக்கியதும், இதனால் அமமுகவை வலுவிழக்கச் செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அம்மா ஆட்சி அமைக்கவே அமமுக தோன்றியது -டிடிவி தினகரன்

இதையடுத்து, சென்னை தி.நகர் இல்லத்தில் தினகரன் சசிகலாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அம்மா ஆட்சி அமைப்பதற்காகவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தோன்றியது.

அம்மா ஆட்சி அமைக்கவே அமமுக தோன்றியது -டிடிவி தினகரன்

அமமுகவில் 8, 9 நேர்காணல் நடைபெறும். 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அமமுக தேர்தலில் போட்டியிடும். எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் இணைந்து களம் காணுவோம். நிச்சயம் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.

அம்மா ஆட்சி அமைக்கவே அமமுக தோன்றியது -டிடிவி தினகரன்

மேலும், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் அதை அறிவிப்போம். அமமுக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*