அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

66 / 100
அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

மின் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதனை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின் இணைப்பு பணி நியமன ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

கோவைக்கு 154 புதிய மின்மாற்றிகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6,363 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. 1,103 விவசாயிகள் அதற்கான ஆணை பெற்றுள்ளனர். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 8,095 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 154 புதிய மின்மாற்றிகள் அமைய உள்ளன. 13 துணை மின்நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மொத்தம் 203 கோடி செலவில் இந்த பணிகள் நடைபெற உள்ளன.

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் சுமை ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி. ஏறத்தாழ 15,000 முதல் 14,000 கோடி வரை வட்டி செலுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சொந்த நிறுவு திறன் 53 விழுக்காடு மெகாவாட் மட்டுமே தான் இருந்தது. இதன் காரணமாக இந்த துறையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் 4 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்

அனல் மின் நிலையத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் நிறுவு திறன் 4,320 மெகாவாட். கடந்த ஆட்சியில் 1,800 மெகாவாட் மட்டுமே உறபத்தி செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதங்களில் 3,500 மெகாவாட் உயர்ந்துள்ளது. மதுக்கடைகளை பொருத்தவரை தவறு செய்த ஊழியர்களில் 134 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4 சதவீத கமிஷன் பெறுவதாக பாஜகவின் அண்ணாமலை தெரிவிக்கிறார். அரிச்சுவடிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நேற்று முன்தினமே இதற்கு பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன். நல்ல மனிதராக, சாப்பாட்டுக்கு உப்புப் போட்டு சாப்பிடும் ஆளாக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் அவர் பேசுகின்றார்.

அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை: அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதில்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும் என்றார்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*