ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! #BREAKING

13 / 100

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! #BREAKING

அதிமுக அரசு பிப்ரவரி மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, இந்த ஆண்டின் முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. கடந்த மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் 16-வது கூட்டத் தொடரை நடத்தியது.

தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான நன்றி மற்றும் விவாதம் நடைபெற்று, ஜூன் மாதம் 24ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் வேளாண்மைக்கு முதல் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் தாக்கல் குறித்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அலுவலர்களுடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகினது.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! #BREAKING

இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வென்று புதிய ஆட்சி அமைந்ததையடுத்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட்டுடன் விவசாய பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பட்ஜெட் தமிழக பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரும் 13ஆம் தேதி நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*