ஆட்டுடன் செல்ஃபி வீடியோ எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. வைரல் வீடியோ

ஆட்டுடன் செல்ஃபி வீடியோ எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. வைரல் வீடியோ

ஒரு பெண் ஆட்டுடன் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நேர்ந்த ஒரு விபரீதம், தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ஆட்டுடன் செல்ஃபி வீடியோ எடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. வைரல் வீடியோ

உலகளவில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் முதன்மை இடத்தை பிடித்திருப்பது செல்போன்கள். தற்போது, இளைய தலைமுறையினரிடையே செல்போன்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது, ஏதொரு ஒரு இடத்தில் நடக்கும் பல வேடிக்கையான விசயங்கள் முதல், பலதரப்பட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாவதற்கு, செல்போன்களும் ஒரு காரணமாகின்றன. அதிலும், செல்ஃபி எடுப்பது மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி மோகம் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆனால், இந்த செல்ஃபி மோகத்தால் பலரின் வாழ்க்கை பறிபோனதும் பல விசயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இருந்தாலும், மக்கள் இந்த செல்ஃபி மோகத்தில் இருந்து வெளியே வருவதில்லை. அந்த வகையில், இங்கு ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது, அவருக்கு நேர்ந்த ஒரு விபரீதம், தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது. ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுக்கும்போது, அருகில் வந்த அந்த ஆடு, கோபத்தில் அந்தப் பெண்ணை தாக்கிய வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ஒரு கிராமத்தில் இருக்கும் சாலைபோல் தோற்றமளிக்கும் இடத்திற்கு நடுவில், அந்த பெண் செல்ஃபி வீடியோ எடுப்பதைக் காணலாம்.

மேலும், அவர் நிற்கும் இடத்தில் இருந்து, சிறுது தூரத்தில் ஆடு ஒன்று இருப்பதையும் காணலாம். அந்த ஆடு, ஒரு நீண்ட கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. மேலும், செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு மிக அருகில் வந்தது. ஆடு மிக அருகில் வருவதைக் கண்ட பெண் தனது முகபாவனைகளை மாற்றிக் கொண்டே வீடியோவை எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்து வரும், விளைவுகளை பற்றி தெரியாமல் அந்த பெண் செல்ஃபி வீடியோவை எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ஆடு முன்னும் பின்னுமாக நகர்வதைக் காணலாம். திடீரென்று, அந்த ஆடு இரண்டு அடி பின்னால் நகர்ந்து, அந்த பெண்ணை நோக்கி வேகமாக ஓடிவந்து தலையால் அந்த பெண்ணை முட்டியது.

அந்த வீடியோ பதிவு சமீபத்தில் ‘Thewildcapture’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தால் என்ன தவறு நடக்கக்கூடும்? என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய வருகிறது. நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் அடுத்தமுறை அவர் ஒரு மிருகத்துடன் செல்ஃபி வீடியோ எடுக்க முயற்சிக்கும்போது ஹெல்மெட் அணிந்து எடுக்க வேண்டும் என்று சிலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.

இன்னும் சிலரோ, அந்தப் பெண்ணிற்கு கடுமையான காயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கவலை தெரிவித்தனர். இந்த செல்ஃபி வீடியோவை பார்ப்பதற்கு, ஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும், அந்த பெண்ணிற்கு காட்டாயம் பலத்த காயம் ஏற்பட்டிருக்கக்கூடும். சமீபகாலமாக செல்லப்பிராணிகளுடன் எடுக்கும் வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி வருவது அனைவரும் அறிந்ததே. சிலர் அதிக லைக்ஸ் வேண்டும் என்பதற்காக விலங்குகளை தொந்தரவு செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால், இதுபோன்ற விபரீதங்களும் நடந்துவிடுகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*