ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் விசாகப்பட்டிணம், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது.

ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திரவில், நகராட்சித்தேர்தல் முடிவுகளில் உள்ளாட்சித்தேர்தலைப் போலவே, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஸ்வீப் செய் செய்துள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் முழுவதுமாக வெளியாகாத நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு வாய்ப்பே அளிக்காமல், ஏறக்குறைய பெரும்பாலான இடங்களை ஆந்திர நகராட்சி தேர்தல் கைப்பற்றியுள்ளது.

ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திராவில் விசாகப்பட்டிணம், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான நகர்புற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இதற்கும் கடந்த 5ம் தேதி தான் வேட்பாளர்கள் பட்டியலே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இதையடுத்து, ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் 80% அளவுக்கு முழுமையான வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை அருகில் கூட வர முடியாத வெற்றியை பதிவு செய்தது. மேலும், முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட குப்பம் தொகுதியையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அசைத்துப் பார்த்தது.

ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இந்தநிலையில், மகத்தான வெற்றியை ருசித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நகராட்சித் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உள்ளாட்சித் தேர்தல் போலவே, நகராட்சித் தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 12 மாநகராட்சிகளையுமே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்ற உள்ளது. 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் 67இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். இதன் மூலம் இந்த தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே முழுமையாக ஸ்வீப் செய்ய உள்ளது. இருந்தாலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அராஜகத்தில் ஈடுபடுவதாக, தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். பாஜக தேர்தலில் போட்டியிடாமல் வேட்பு மனுவை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர நகராட்சி தேர்தல்: வெற்றிகளை குவித்த ஜெகன் மோகன் ரெட்டி!

இந்தத் தேர்தலில் பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதேபோல் ஓவைசியின் AIMIM கட்சி இருமாநில பிரிவிணைக்கு பின்னர் முதல் முறையாக இந்தத் தேர்தலில் போட்டியில் இறங்கியுள்ளது.

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*