ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

பொள்ளாச்சி, பிப்.27
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமையான இன்று குண்டத்தில் இறங்கினர்.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் தரிசனத்திற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அம்மாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்குவது வழக்கம்.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

இந்தாண்டு கடந்த 11ஆம் தேதி தை அமாவாசை அன்று குண்டம் விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து 24ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது. 25ஆம் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெற்றது.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

அத்தோடு, 26ஆம் தேதி காலை குண்டம் கட்டுதல் நடைபெற்றது. இதில், குண்டம் கட்டும் பணியில் முறைதாரர்கள் ஈடுபட்டு குண்டத்தை தயார் செய்து, அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து மலர்தூவி மாலை அணிவித்தனர். அன்று மாலை 6 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெற்றது.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

27ம் தேதி சனிக்கிழமை காலை அம்மன் அருளாளிகள் ஆழியாற்றில் நீராடிவிட்டு ஆழியாற்றங்கரையில் அருள் வந்து ஆடினர். பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு அருளாளிகளிடம் குண்டம் இறங்குவதற்கான உத்தரவை பெற்றனர். இதில், சிலருக்கு அருளாளிகள் உத்தரவு தரவில்லை. அம்மன் அருளாளிகள் உத்தரவு கிடைக்காதவர்கள் குண்டம் இறங்க மாட்டார்கள்.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

மேலும், அருளாளிகளிடம் உத்தரவு பெற்ற பக்தர்கள், அங்கிருந்து குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்து வரிசையில் காத்து நின்றனர். ஆனைமலை ஆற்றங்கரையிலிருந்து அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்தனர். இதையடுத்து, குண்டம் முன்பு தேரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்மனை வழிபாடு செய்தனர். அதற்கு பிறகு குண்டம் இறங்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது, வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டது. அதன்பிறகு, முறைதாரர்கள் எலுமிச்சை கனி, பூ மாலையால் செய்யப்பட்ட பந்தை குண்டத்தில் உருட்டிவிட்டனர்.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

அவைகள் வாடாமல் அப்படியே இருந்தது. தொடர்ந்து முறைதாரர்கள், அருளாளிகள் குண்டம் இறங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லாததால் கைகளால் பூ வை மூன்று முறை எடுத்து குண்டத்தில் மீண்டும் போட்டனர்.

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா 2021 | Anaimalai Masaniyamman Gundam Festival 2021

குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை பார்க்க பல்லாயிர கணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 250க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவர் குழு, தீயணைப்பு துறையினர் போன்றவர்கள் தயார் நிலையில் இருந்தனர். குடிநீர், கழிப்பிட வசதி போன்றவையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*