ஆபர்களை அள்ளிதெளிக்கும் ஜியோ: ரிசார்ஜ் செய்தால் 20% கேஷ்பேக்… Jio

59 / 100

இந்தியாவில் அதிவேக 4ஜி தொழில்நுட்பத்தில்
ரிலையன்ஸ் ஜியோ பெரும் புரட்சி செய்து வருகிறது.


ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவைக்கு வரும்வரையில், ஏர்டெல் அளித்த 4ஜி சேவைகளை வசதி படைத்தோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையிலிருந்தது. ஜியோ தொலைத்தொடர்பு சேவை தொடங்கியதிலிருந்து பெரும்பாலான மக்களை 4ஜி பக்கம் இழுத்து வந்தது. அதற்கு காரணம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மலிவான விலையில் டேட்டா பேக்ஸ். போட்டிக்கு ஜியோ வந்தததால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் இறங்கிவர ஆரம்பித்தன.

ஆபர்களை அள்ளிதெளிக்கும் ஜியோ: ரிசார்ஜ் செய்தால் 20% கேஷ்பேக்… Jio

தற்போதும் பெரும்பாலானோரின் சாய்ஸாக ஜியோவே இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நோக்கில் கேஷ்பேக் ஆபரகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதையடுத்து, ரூ.249, ரூ.555, ரூ.599 ஆகிய ரேட்களில் ரிசார்ஜ் செய்தால் 20% பணம் ரிட்டர்ன் வரும்படியான கேஷ்பேக் ஆபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உதாரணமாக சொல்லவேண்டுமானால் ரூ.249-க்கு ரிசார்ஜ் செய்தால் சுமார் ரூ.50 பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். பிரிபெய்டு ரிசார்ஜ்களுக்கு மட்டும் இது சலுகை கிடைக்கும்.

இதிலும் குறிப்பாக MyJio செயலியில் ரிசார்ஜ் செய்பவர்களுக்கே இந்த ஆபர் கிடைக்கும். இதைத்தவிர்த்து கூகுள்பே, போன்பே போன்ற செயலிகளில் ரிசார்ஜ் செய்தால் பணம் திரும்ப கிடைக்காது.

ஆபர்களை அள்ளிதெளிக்கும் ஜியோ: ரிசார்ஜ் செய்தால் 20% கேஷ்பேக்… Jio

28 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டேட் கால் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் ஆகியவற்றை உள்ளடக்கியது ரூ.249 பிளான். அதேபோன்று 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா அன்லிமிட்டேட் கால் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.599 பிளானுக்கும், அத்தோடு 84 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டேட் கால் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கும் ரூ.555 பிளானுக்கும் இந்த கேஷ்பேக் ஆபர் வழங்கியுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*