ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தனின் ஐ.ஜே.கே கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன. இதில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் 7ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

இந்நிலையில், ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ஆலந்தூர் தொகுதி ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்குட்பட்டுள்ளது.

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளது. அதே போல் கோவை தெற்கு தொகுதியில் 1,45,105 வாக்குகள் பெற்றது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கமல் மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*