ஆளுமைமிக்க ஜெயலலிதா இல்லாத அதிமுக: பொழிவிழக்கிறதா ?

ஆளுமைமிக்க ஜெயலலிதா இல்லாத அதிமுக: பொழிவிழக்கிறதா ?

மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும்போது தேர்தலில் போட்டியிட தொண்டர்களால் விருப்ப மனு கொடுக்கப்படும் நிகழ்வு திருவிழா போல நடைபெறும்.

ஆளுமைமிக்க ஜெயலலிதா இல்லாத அதிமுக: பொழிவிழக்கிறதா ?

அதேநேரத்தில் இறுதி வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவதற்கு முன்பாகவே பரபரப்பு குறைவிருக்காது. ஜெயலலிதா இருந்தபோது ஓபிஎஸ் தலைமையிலான ஐவர் குழுவை விருப்ப மனுக்களைப் பரிசீலனை செய்து, நேர்காணல் நடத்துவார்கள். தேர்வானவர்களின் பட்டியலை ஜெயலலிதாவிடம் கொடுப்பார்கள்.

மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் சார்பில் 234 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விரும்பும் அதிமுகவினர், விருப்பமனு தாக்கல் செய்யும் சம்பிரதாயம் இருந்தது. அதாவது, ஜெயலலிதாவுக்கு போகத்தான் தங்களுக்கு மிச்சம் என்பதுதான் இதற்கு அர்த்தம். இதனால் கூடுதல் நிதியும் கட்சிக்குக் கிடைத்தது.

ஆளுமைமிக்க ஜெயலலிதா இல்லாத அதிமுக: பொழிவிழக்கிறதா ?

பொதுச்செயலாளர் பதவியைத் தூக்கியதுபோல, இந்தச் சம்பிரதாயத்தையும் இரட்டைத் தலைமை மாற்றியமைத்தது. அதேபோல் நேர்காணலும் ஒரே நாளில் கண்துடைப்புக்காக நடைபெறுகிறது.

Chennai: AIADMK office celebrates as Jayalalithaa looks at second term as  CM - Politics News , Firstpost

மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமையால், விதிகள் மாற்றியமைப்பு, தலைமை மீதான அவநம்பிக்கை காரணமாக, 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் இம்முறை 3 மடங்கு அளவிற்கு விருப்ப மனுக்களின் வருகை குறைந்துள்ளது.

ஆளுமைமிக்க ஜெயலலிதா இல்லாத அதிமுக: பொழிவிழக்கிறதா ?

அதாவது, கடந்த முறை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்து குவிந்தன. ஆனால், இம்முறையோ வெறும் 8 ஆயிரம் சொச்சம் மனுக்களே வந்திருக்கின்றன. அதிமுக தலைமைக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லையாம். முன்பே திட்டமிட்டபடி அவர்களுக்குப் பிடித்த ஆட்களை ஏற்கெனவே தேர்வுசெய்து வைத்துவிட்டார்களாம்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*