இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்: அய்யா தா.பாண்டியன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவராக இருந்த அய்யா தா.பாண்டியன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்: அய்யா தா.பாண்டியன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்

தா.பாண்டியன் மதுரை அடுத்த உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1942-இல் பிறந்தவர். இவர், 1989-1991, தேர்தலில் வெற்றிபெற்று தா.பாண்டியன், இரண்டுமுறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி, 1983 முதல் 2000 வரை மாநில செயலாளராக தொடர்ந்து இருந்தார் தா.பாண்டியன். இதையடுத்து, 2000ஆம் ஆண்டு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்: அய்யா தா.பாண்டியன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்

இதையடுத்து, 2005லில் தா.பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், தொடர்ந்து தா.பாண்டியனை மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர். அய்யா தா.பாண்டியனை இளம் வயது முதலே கட்சியின் தேசியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இறுதிவரையில் பொறுப்பில் இருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்: அய்யா தா.பாண்டியன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்

இந்நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். இந்தநிலையில், தற்போது சிறுநீரக செயலிழப்பு காரணங்களால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், இன்று அவர் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*