இந்தி தெரியாது போடா…; இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக டி-சர்ட்டுகள்

இந்தி தெரியாது போடா...; இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக டி-சர்ட்டுகள்

தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக, ‘இந்தி தெரியாது போடா..!’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டிகளை சினிமா பிரபலங்கள் சிலர் அணிந்த போட்டோக்கள், இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தி தெரியாது போடா…; இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக டி-சர்ட்டுகள்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன் என்பவர்தான், இந்த டி-சர்ட்டினை வடிவமைத்திருந்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல சிங்கப்பூர், அமெரிக்கா, கத்தார் நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த டி-சர்ட்டினை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான திமுக பிரச்சாரம் என்று தமிழக பாஜகவினர் சிலர் அப்போது கொதிந்தெழுந்தனர். திமுகவின் அன்றைய பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில், ‘இந்துக்கள் வாக்குகள் வேண்டாம் போடா!’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டினை திமுக பிரச்சாரம் செய்யலாமே, இந்த டி சர்ட்டினை உங்கள் டி-சர்ட் கம்பெனியிலேயே தயாரிக்கலாமே. அது முடியும் என்று கனிமொழிக்கு கூறியிருக்கிறார் தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.

இந்தி தெரியாது போடா…; இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக டி-சர்ட்டுகள்

இதற்கிடையில், திமுக எஸ்சி, ஒபிசி, மைனாரிட்டி ஓட்டுகளைத்தான் தேடுகிறது. இந்தநிலையில், இந்து ஓட்டு தேவையில்லை என்று ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு சொன்னார். இதற்கு பதில் கூறிய அரசியல் விமர்சகர் அருணன் ஆக, பாஜகவிற்கு உயர் சாதியினர் மட்டுமே இந்துக்கள்! பிஜேபி என்றால் ‘பிராமணிய ஜனதா கட்சி என்பதை உறுதி செய்துவிட்டார்!’ என்கிறார்.

இந்தி தெரியாது போடா…; இந்துக்கள் ஓட்டு வேண்டாம் போடா -திமுக டி-சர்ட்டுகள்

இந்தநிலையில், இந்துக்கள் என்றால், பிராமணர்கள் மட்டும்தான் என்ற நோக்கில்; காயத்ரி ரகுராமும், குஷ்புவும் பேசியிருப்பது சலசலப்பை உருவாக்கி உள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*