இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் களமே காத்திருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய மாபெரும் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.

இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

இந்தநிலையில், பல அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், இளைஞர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, 60 நாட்களில் புதிதாக தொழில் தொடங்க அனுமதிக்கப்படும். மக்கள் நலப் போராட்ட வழக்குகளை திரும்பபெறுவது, விவசாயத்துடன் இணைந்த தரிசு நிலங்களை மேம்பாடுத்துதல், மதுபான உற்பத்திற்கு இனி அனுமதி வழங்கப்படாது. அனுமதிபெற்று இயங்கி வரும் நிறுவனங்களையும் படிப்படியாக குறைக்கப்படும்.

இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

மேலும், திமுக தனது அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, ரேஷன் அட்டைகளுக்கு ரூ.4,000 பணம் என அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த திமுகவின் தேர்தல் அறிக்கை, அனைவரையும் திரும்பி பார்க்கவைக்கும் அளவுக்கு இருந்தது.

இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

இந்தநிலையில், அதிமுக இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் அறிக்கையை வெளியிடயிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து அறிக்கையை வெளியிட உள்ளனர். ரேஷன் அட்டைகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் கொடுக்கப்படும், வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அதிமுக ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அவையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.

இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை 12 பேர் கொண்ட குழு, தமிழகம் முழுவதும் பயணித்து, மக்களின் தேவைகளையும் குறைகளையும் அறிந்து, அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக தயாரித்திருக்கிறதாம். திமுகவின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவிற்கு அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்..

வாக்காளரும் வேட்பாளரும்
உங்கள் வேங்கை வெற்றியில் விரைவில்

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*