இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகளுடன் வாழ்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகளுடன் வாழ்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு காதலிகளுடன், சுழற்சி முறையில் குடும்பம் நடத்திய மன்மதராசா ஸ்டீபன், மாணவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகளுடன் வாழ்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அடுத்த கலந்தபனை புதூரில் ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்தவர் ஸ்டீபன். 25 வயது இளைஞருக்கு இரண்டு பொண்டாட்டிகளா என்று ஊரே ஒரு மாதிரியாக பேசி வந்தது. ஆனால், அந்த ஊருக்கும் அந்த இரண்டு மனைவிகளுக்கும் கூட தெரியவில்லை. ஸ்டீபனுக்கு இரண்டு காதலிகள் இருப்பது. 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தனிக்குடித்தனம் நடத்தியது இப்போது அம்பலமானது.

இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகளுடன் வாழ்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

அதாவது, பணகுடி காவல்நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என்று, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தபோது, 10ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியை ஸ்டீபன் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.

வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து, அந்த மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி ஸ்டீபன் வந்துபோனது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கண்டித்துள்ளனர். இந்தநிலையில், தான் மகளை காணவில்லை என்பதை உணர்ந்த பெற்றோர், ஸ்டீபன் தான் கடத்திச் சென்றிருப்பான் என்பதையும் ஊகித்தனர்.

இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகளுடன் வாழ்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்ததில், நாகர்கோவிலில் மலைப்பகுதியில் இருக்கும் மாட்டுப்பண்ணையில் சாணம் அள்ளும் வேலை பார்த்துக்கொண்டு மாணவியுடன் வசித்து வருவது தெரியந்தது. தனிப்படை போலீசார் ரகசியமாக சென்று ஸ்டீபனை சுற்றி வளைத்தனர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக அழைத்து வந்து உறவு கொண்டதாக மாணவி கூறியிருக்கிறார்.

காவல்துறை ஸ்டீபனை கவனிப்பு சரியாக கவனித்ததால் உண்மை வெளியே வந்தது. இதில், இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகள் மற்றும் மாணவியுடன் சுழற்சி முறையில் குடும்பம் நடத்தி வந்ததை ஒப்புக்கொண்டான்.

இரண்டு மனைவிகள், இரண்டு காதலிகளுடன் வாழ்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து, சிறுமியை கடத்திய வழக்கு மற்றும் சிறுமியை வன்கொடுமை செய்ததால் போக்சோ சட்டமும் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்டீபன்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*