இரவில் குன்னூர் சாலையில் உலா வரும் புலி: பொதுமக்கள் அச்சம்

இரவில் குன்னூர் சாலையில் உலா வரும் புலி: பொதுமக்கள் அச்சம்
இரவில் குன்னூர் சாலையில் உலா வரும் புலி: பொதுமக்கள் அச்சம்
60 / 100

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவு நேரங்களில் சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இரவில் குன்னூர் சாலையில் உலா வரும் புலி: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள வனப்பகுதிகளில் மான்கள், கரடிகள், யானைகள், சிறுத்தைகள் என பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கைவிட்டது.

இந்தநிலையில், நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று, குன்னூர் – கோத்தகிரி சாலையில் உள்ள பெல் மவுண்ட் பகுதியில் உலா வந்தது. இதைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, தங்களுடைய வாகனங்களை தொலைவில் நிறுத்திவிட்டு, அச்சத்துடன் புலி கடந்து செல்லும்வரை காத்திருந்தனர்.

இரவில் குன்னூர் சாலையில் உலா வரும் புலி: பொதுமக்கள் அச்சம்

இந்தநிலையில், சாலையில் சிறிதுநேரம் உலாவிய அந்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சிறிது நேரம் பதட்டமடைய செய்த புலி வனத்துக்குள் சென்றதும் நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில், சாலையில் புலி உலாவந்த சம்பவம் குன்னூர் பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*