இ-பட்ஜெட்: அசத்தும் திமுக அரசு!

52 / 100

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இ-பட்ஜெட்2021 தாக்கல் செய்யப்படுகிறது.

இ-பட்ஜெட்: அசத்தும் திமுக அரசு!

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பு கூட்டத்தொடரிலேயே வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இ-பட்ஜெட்: அசத்தும் திமுக அரசு!

இந்நிலையில், தமிழக பட்ஜெட்2021 தாக்கல் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின்போது நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் கணினி மூலம் பார்க்கும் வசதி செய்யப்படுகிறது. காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு புத்தகங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பட்ஜெட்: அசத்தும் திமுக அரசு!

இதுவரை, வழக்கமாக புத்தகமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், தற்போது இதைத் தவிர்த்து இ-பட்ஜெட் அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் காலங்களில் படிப்படியாக சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் காகிதமில்லா சட்டமன்ற நிகழ்வாக மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினி வழங்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*