உங்க வெள்ளை அறிக்கைய யார் கேட்டா? மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்த வானதி சீனிவாசன்

55 / 100

வரும் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் முதல் பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உங்க வெள்ளை அறிக்கைய யார் கேட்டா? மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்த வானதி சீனிவாசன்

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் 14-ஆம் தேதி தாக்கலாகிறது. ஆனால் அதற்கு முன்பு இன்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலையின் வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என்று கூறப்பட்டது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் வருவாய் மற்றும் செலவுகளைக் குறிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையிலும் மின்துறையிலும் பெரும் நஷ்டத்தை இயங்கியுள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு 87 கோடி ரூபாய் வட்டியாக செலுத்துகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் வாங்கிய மூன்று லட்சம் கோடி ரூபாய் பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினமாகும்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15ஆம் ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் கடன், அதன்பிறகு பல மடங்கு அதிகரித்தது இருக்கிறது. அதிமுக அரசு அளித்த கடன் கணக்குகள் எதுவும் சரியாக இல்லை என்றார்.

Tamil Nadu: At poll campaign launch, EPS gets backing of home crowd but  will that be enough? - India News

இதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதிமுக வாங்கிய கடன்கள் அனைத்தும் வளர்ச்சி திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது எனவும், அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு என பதிலடி கொடுத்திருந்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வெள்ளை அறிக்கையில் எந்தவித புதிய விஷயமும் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் நீங்கள் வைக்கப்பட்ட கடனை, அதிமுக ஆட்சியில் வட்டி கட்டியிருக்கிறோம். வெள்ளை அறிக்கை மூலமாக திமுக அரசு மக்களை திசை திருப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்..

உங்க வெள்ளை அறிக்கைய யார் கேட்டா? மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்த வானதி சீனிவாசன்

மேலும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசனுக்கும் நிதியமைச்சருக்கும் ஏற்கெனவே வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில், வானதி சீனிவாசன் வெள்ளை அறிக்கை குறித்தும் கமெண்ட் அடித்திருக்கிறார். வானதி சீனிவாசனின் ட்வீட்டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால் அதற்கு வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். பிடிஆர் வானதியை ட்விட்டரில் பிளாக் செய்து வைத்திருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*