உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளப் பெருக்கில் சுமார் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்

மேலும், நந்திதேவி பனிக்குன்று உடைந்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்

இந்தநிலையில், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 3 குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்

உத்தரகாண்ட் மாநில அரசுக்கு வெள்ள மீட்பு பணியில் உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்

இந்திய விமான படையின் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும், கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்பட்டால் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில், மீட்பு பணிகளுக்கான ஆலோசனை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டம் ஒன்றும் நடந்து வருகிறது. இதையடுத்து, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் 2 மருத்துவ குழுக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றுள்ளன.

உத்தரகாண்ட் வெள்ளம்: 150 பேர் வரை பலியாகி இருக்கலாம்; மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம்
https://twitter.com/ghilli005/status/1358337770075213825

மேலும், தபோவன் அணையில் சிக்கிய 16 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*