உத்திரமேரூர் கல்குவாரி விபத்து: உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

காஞ்சிபுரம் அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட பாறைகள் சரிந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்திரமேரூர் கல்குவாரி விபத்து: உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

காஞ்சிபுரம், உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் நேற்று பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறை குவியலுக்குள் சிக்கிக்கொண்டனர். இவர்களுடன் ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்களுடன் சிக்கியது. தகவல் அறிந்தும் வந்த மீட்புப் படையினர், பாறை குவியலுக்குள் அடியில் சிக்கியிருந்த 2 பேரை சடலமாக மீட்டனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த சிலரை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உத்திரமேரூர் கல்குவாரி விபத்து: உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

மேலும், கல்குவாரி விபத்தில் 8 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களும் பாறை குவியலுக்குள் சுமார் 200மீ அடியில் புதைந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

உத்திரமேரூர் கல்குவாரி விபத்து: உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி 2ஆவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து நேர்ந்த இடத்தில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். இதையடுத்து, கல்குவாரி உரிமையாளர்கள் 2 பேர் மீது, 2 பிரிவுகளில் சாலவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்குவாரி உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*