உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

68 / 100

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்... அதிமுகவிற்கு இறங்குமுகம்...

கோவை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று மொத்தம் 13 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

நடைபெற்ற இடைத்தேர்தலில் 55,280 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதையடுத்து, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. அதில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்... அதிமுகவிற்கு இறங்குமுகம்...
vengai 1

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்குமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2,312 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் நாரயணமூர்த்தி 1,451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவு வேட்பாளர் சரஸ்வதி 834 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

அதேபோல், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 6,555 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் கலைவாணி 4,372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்... அதிமுகவிற்கு இறங்குமுகம்...
vengai 2

மேலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மொத்தம் 10 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. அதில், தேக்கம்பட்டி 15-வது வார்டில் 591 வாக்குகள் பதிவாகின, அதில், திமுக ஆதரவு வேட்பாளர் 379 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இதையடுத்து, வெள்ளியங்காடு 10-வது வார்டில் 411 வாக்குகள் பதிவாகின, இதில் திமுக ஆதரவு வேட்பாளர் முருகம்மாள் 213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெள்ளாதி 3-வது வார்டில் 767 வாக்குகள் பதிவாகின, அதில், அதிமுக ஆதரவு வேட்பாளர் சுரேஷ் 372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து, கள்ளிபாளையம் 5-வது வார்டில் 272 வாக்குகள் பதிவாகின, அதில், திமுக ஆதரவு வேட்பாளர் மனோன்மணி 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். போகம்பட்டி 6-வது வார்டில் 376 வாக்குகள் பதிவாகின, அதில் அதிமுக ஆதரவு வேட்பாளர் சந்தியா 214 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்... அதிமுகவிற்கு இறங்குமுகம்...

மேலும், மாதம்பட்டி 3-வது வார்டில் பதிவாகின வாக்குகள் 361, அதில், திமுக ஆதரவு வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குருடம்பாளையம் 9-வது வார்டில் 913 வாக்குகள் பதிவாகின, அதில், திமுக ஆதரவு வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், கிணத்துக்கடவு அடுத்த முத்தூர் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 288 வாக்குகள் பதிவாகின. அதில், திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜமீன் முத்தூர் 2-வது வார்டில் 422 வாக்குகள் பதிவாகின, அதில், திமுக ஆதரவு வேட்பாளர் செந்தில்குமார் 289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சீராபாளையம் 4-வது வார்டில் 334 வாக்குகள் பதிவாகின, அதில், திமுக ஆதரவு வேட்பாளர் ஜெயபிரகாஷ் 168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் உள்ள 13 பதவிகளில் 11 பதவிகளை திமுக பெற்றது. அதன்படி, கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) தேர்தலில் திமுக நிர்வாகி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 42,067 பேர் வாக்களித்திருந்தனர். அதில், திமுக ஆதரவு வேட்பாளர் ஆனந்தன் போட்டியிட்டார். ஒன்பது சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், ஆனந்தன் 26 ஆயிரத்து 287வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி 13,251 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் மொத்தம் 718 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*