எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்: அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகல்

எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்: அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகல்

அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்: அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகல்

2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்டவை உள்ளன. ஆனால், 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போதும், மக்களவை தேர்தலின்போதும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பெயர் எந்த இடத்திலும் அடிபடவில்லை.

இதையடுத்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்எல்ஏ கருணாஸ் அதிமுகவில் கூட்டணி வைக்க அழைப்பார்கள் என்று நம்பியிருந்த நிலையில், ஏமாற்றமே எஞ்சியது. சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அவருக்கு இடம் வழங்கப்படவில்லையா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருந்தது.

எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்: அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகல்

இந்நிலையில் முக்குலத்தூர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், அதிமுகவில் என்னை சசிகலா அம்மையார் அறிமுகப்படுத்திய காரணத்தினால் புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிச்சாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்: அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகல்

கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு நாடகம் தேர்தல் ஆதாயத்திற்காக தந்தது. மேலும், மற்ற சமுதாய மக்களிடம் விரோதம் வாங்கிக் கொண்டது அதிமுக. முக்குலத்தோர் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை என்றார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*