எழுவர் விடுதலை: ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனத்துக்குரியது –வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

எழுவர் விடுதலை தொடர்பான தமிழக ஆளுநருடைய கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை: ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனத்துக்குரியது –வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்கக்கோரி பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

எழுவர் விடுதலை: ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனத்துக்குரியது –வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்

ஆளுநர் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்க, பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு இதுகுறித்து முடிவெடுக்க ஒருவார காலம் அவகாசம் வழங்கியது. ஆனால், 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் உள்ளது என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒரு வார காலத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், 7 தமிழரை விடுவிக்கும் தொடர்பான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே இருப்பதாக உள்துறை அமைச்சகம் வாயிலாக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.

இந்தநிலையில், தமிழர்கள் எழுவர் விடுதலைக்கான நேரம் கனிந்து வருவதாக நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில், அந்த நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடும் ஆளுநரின் இதுபோன்ற நயவஞ்சகமான கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*