எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

57 / 100

அதிமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று தீவிர சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுகவின் ஆட்சியின் போது உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். அமைச்சராக இருந்தபோது, எஸ்.பி.வேலுமணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. தமிழக அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 1.20 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக, எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் நேற்று போலீசாரிடம் புகார் அளித்தார்.

எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!!

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏவின் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய பங்குதாரர்கள் 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏக்கு நெருங்கிய நபர்கள் வீடுகளில் சோதனை நடக்கிறது. சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது. இதற்கு முன்பே அதிமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*