ஏற்றுமதியில் ஏற்றம்… முன்னணியில் தமிழ்நாடு… ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

60 / 100

தமிழகத்தை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்றுமதியில் ஏற்றம்… முன்னணியில் தமிழ்நாடு… ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொழில் முதலீடுகள் ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

விழாவின் முக்கிய அம்சமாக கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்தின. இந்த கண்காட்சி பொது மக்களுக்காக செப்டம்பர் 22, 2021 அன்று 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்து இருக்கும்.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு

மாநாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு ஆகியவற்றை வெளியிடுவார். இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட உள்ளன. விழாவில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளன.

நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக தலைமை செயலாளர் வே.இறையன்பு, ஒன்றிய அரசின் வணிகவரித் துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பங்கஜ்குமார் பன்சல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் அருண்ராய், வர்த்தக துறையின் கூடுதல் இயக்குனர் சண்முக சுந்தரம், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி, தொழில் வணிக ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்தியன் மற்றும் உயர் அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏற்றுமதியில் ஏற்றம்… முன்னணியில் தமிழ்நாடு… ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிக்னல் கொடுத்த விஜய்: வேட்பாளர்கள் பட்டியல் ரெடி!

உள்ளாட்சித் தேர்தல்:வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் இழுபறி… காரணம் என்ன?

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு விருது: கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அரசு விருது அறிவிப்பு!!

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி: ரூ. 425.40 தினக்கூலி தமிழக அரசு நிர்ணயம்

About Vengai Vetri 252 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*