ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன்: வெள்ளை அறிக்கை வெளியீடு

59 / 100

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது நிதிநிலை மோசமாக இருந்ததாகவும், கடன் அதிகளவு வாங்கப்பட்டிருப்பதாகவும் அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதையடுத்து, திமுக ஆட்சி அமைந்தால் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன்: வெள்ளை அறிக்கை வெளியீடு

அதேபோல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்று தனிப்பெருமான்மையோடு ஆட்சியும் அமைத்தது. நிதி அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சி அமைந்து 100 நாட்களை நெருங்க உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன்: வெள்ளை அறிக்கை வெளியீடு

இதையடுத்து, செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :- கடைசியாக 2001லில் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து கடைசியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போதைய வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நானே பொறுப்பு. இந்த அறிக்கையை ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்புதான் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய வருமானம் பலமடங்கு சரிந்துள்ளது. தமிழக அரசுக்கு வருமானம் வெகுவாக சரிந்து இருப்பதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கான வருமானம் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியின்போது கடந்த 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைமை இருந்ததுள்ளது. தமிழ்நாடு அரசிற்கு கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக ஏற்பட்டது.

Release Of Financial White Paper On August 9th | ஆகஸ்ட் 9ஆம் தேதி நிதிநிலை வெள்ளை  அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பது முக்கிய பிரச்சனையாகியுள்ளது. 2020-21லில் மட்டும் ரூ.61,320 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன் உள்ளது, என்று கூறியுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*