“ஓடை” காணாமல் போக அதென்ன மளிகை பொருளா? – அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

66 / 100
"ஓடை" காணாமல் போக அதென்ன மளிகை பொருளா? - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை
காணாமல்போக அது ஒன்றும் மளிகை பொருள் அல்ல என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

"ஓடை" காணாமல் போக அதென்ன மளிகை பொருளா? - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

உலக புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒருபகுதி நேற்று முன்தினம் (அக்.25) பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்தது. இதையடுத்து, நேற்று (அக்.26) இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதில் சுவர் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் கமலாலயக் குளத்தின் ஒரு கரை சரிந்து விழுந்ததை கேள்விப்பட்டவுடன், விழுந்த கரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இடிந்து விழுந்த மதில் சுவரை முழுவதுமாக கட்டவும், கமலாலயக் குளத்தின் மதில் சுவரின் ஸ்திரத் தன்மையை ஆராய்ந்து நிரந்தர தீர்வுகாணவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை காணாமல் போனதாக குற்றம் சாட்டப்படுகிறது.

"ஓடை" காணாமல் போக அதென்ன மளிகை பொருளா? - அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

காணாமல் போக “ஓடை” ஒன்றும் மளிகைப் பொருள் அல்ல. இடம் அங்கேயேதான் இருக்கும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குறிப்பிட்ட இடத்தை ஆய்வுசெய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட, தற்போது 5 மாத திமுக ஆட்சியில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுகையில், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். கமலாலய குளத்திற்கு என்று நீண்ட நெடிய வரலாறு உள்ளது. தலைவர் கருணாநிதி விளையாடிய இடம். மேலும், சுற்றுலா வரும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

சரவெடி சத்தம் தெறிக்க… தெறிக்க… வெளியான ‘அண்ணாத்த’ அனைத்து பாடல்கள்!

நீட் தேர்வை ரத்துசெய்ய சட்டப் போராட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

7 புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கனமழை எதிரொலி: எட்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*