ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே வேட்பாளர்களை இறுதிபடுத்துவதில் கருத்து வேறுபாடு: அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக கூட்டம் தலைமை அதிரடி உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தலில் குறிபிட்ட சில தொகுதிகளில் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இதனால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதிபடுத்துவதில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே கலந்து கொண்டு கேக் வெட்டி நிகழ்ச்சியை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே வேட்பாளர்களை இறுதிபடுத்துவதில் கருத்து வேறுபாடு: அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளாமல் இருந்தற்கு ஓ.பன்னீர்செல்வம் உடனான கருத்து வேறுபாடு என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிபிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளை தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக, இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே வேட்பாளர்களை இறுதிபடுத்துவதில் கருத்து வேறுபாடு: அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் பழனிச்சாமி கலந்து கொள்ளாமலர் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணியுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் குழப்பமான சூழல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*