கட்சிக்கு எதிராக செயல்பட்டால் 24 மணி நேரத்தில் நானே கட்டம் கட்டிவிடுவேன் -அமைச்சர் துரைமுருகன்

56 / 100

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 1971 ஆம் ஆண்டு முதல் 12 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, அதில் 10 முறை வெற்றி கண்டவர் என்ற பெருமைக்குரியவர் கிண்டலுக்கும்  சொந்தக்காரர் திமுக பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள்.  

கட்சிக்கு எதிராக செயல்பட்டால் 24 மணி நேரத்தில் நானே கட்டம் கட்டிவிடுவேன் -அமைச்சர் துரைமுருகன்

சொசைட்டிகள் கலைக்கப்படும்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் எங்கள் செயலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று பொருள். இந்த உள்ளாட்சி தேர்தலில் தப்பித் தவறி அதிமுக ஜெயித்துவிட்டால், 100 நாளில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, இனிமேல் திமுக ஆட்சி அவ்வளவுதான் என்றெல்லாம் அதிமுக புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தத் தேர்தலில் அதிமுக தோற்றுவிட்டால் அடுத்து வரவுள்ள சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் நிற்கக்கூட அவர்களுக்கு தைரியம் வராது இதுதான் உண்மை. கூட்டத்தில் இருப்பவர்கள் ஒரு விசயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பதவியை 20 பேர் கேட்கிறார்கள். அதுல ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான்  இருக்கும். நான் பொதுச்செயலாளர் என்ற முறையில் உங்களுக்கெல்லாம் ஓர் உறுதியைத் தருகிறேன்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டால் 24 மணி நேரத்தில் நானே கட்டம் கட்டிவிடுவேன் -அமைச்சர் துரைமுருகன்

இந்த உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலையாக எல்லா சொசைட்டிகளையும் கலைத்துவிடுவோம். அதற்கான கையெழுத்தும் போடப்பட்டுவிட்டது. தேர்தல் காலத்தில் அறிவிக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே, தேர்தல் ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் சொசைட்டிகள் கலைக்கப்படும். சர்க்கரை மில், பால்வளம் உட்பட எல்லாற்றையும் கலைப்பேன்.

அதனால், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கெல்லாம் சீட் கிடைக்கவில்லையோ அவர்களுக்கெல்லாம் உரிய பதவிகள் தரப்படும். யாரும் அவசரப்படாதீர்கள். சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை 24 மணி நேரத்தில் நானே கட்டம் கட்டிவிடுவேன்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கோவையில் திமுகவிற்கு ஏறுமுகம்… அதிமுகவிற்கு இறங்குமுகம்…

தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நூலகம் வேண்டும்: வால்பாறை வாசகர்கள் கோரிக்கை

பொன்முடி, செந்தில்பாலாஜி அமைச்சர்களின் வழக்குகளால் திமுக அரசுக்கு புது தலைவலி!

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*