கட்சியும் எனக்கு தான்; பொதுச்செயலாளரும் நான் தான் – கலக்கும் சசிகலா!

பெங்களூரு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன உடனே ஜெயலலிதா காரில் அதிமுக கொடியுடன் வலம் வந்து சசிகலா கிளியரான அரசியல் ஸ்டேட்மென்டை வாய் திறக்காமலேயே கொடுத்தார். அதுவே அதிமுகவின் தற்போதைய இரட்டைத் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

கட்சியும் எனக்கு தான்; பொதுச்செயலாளரும் நான் தான் – கலக்கும் சசிகலா!

இதன் விளைவாக மூத்த நிர்வாகிகளைக் கொண்டு டிஜிபி அலுவலகத்தில் சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை செய்யுமாறு புகார் கொடுக்க வைத்தது. ஒருமுறை கூறினால் மறந்துவிடுவார்கள் என்று நினைத்து இரண்டாவது முறையும் கொடுக்கவைத்தது.

இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்ட சசிகலா, கர்நாடகா எல்லை வரை ஒரு காரில் வந்து, தமிழ்நாட்டின் எல்லைக்குள் அதிமுக நிர்வாகியின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்து கெத்து காட்டினார். அந்த நிர்வாகியைக் கட்சியை விட்டு தூக்கியது வேறு கதை. எடப்பாடி போட்ட அத்தனை திட்டங்களில் இருந்தும் அமைதியாக கையாண்டார்.

கட்சியும் எனக்கு தான்; பொதுச்செயலாளரும் நான் தான் – கலக்கும் சசிகலா!

இதன்மூலமாக அவர் எடப்பாடிக்கு கூற விழைவது ஒன்றே ஒன்று தான். “பொதுச்செயலாளரும் நான் தான்; கட்சியும் எனக்கு தான்” என்பதே அது. இதையொட்டியே அவரின் இன்றைய பேட்டியும் அமைந்தது. அதிமுக தொண்டர்களைத் தான் சசிகலா 1.5 கோடி தொண்டர்கள் என்று சொன்னது. ஒன்றிணைய வாருங்கள் என்று கூறியது எடப்பாடியைத் தான்.

கட்சியும் எனக்கு தான்; பொதுச்செயலாளரும் நான் தான் – கலக்கும் சசிகலா!

இச்சூழலில் தற்போது பரபரப்பான அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அவர் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றுமில்லை கீழ போட்ரு என்ற ரீதியிலேயே கருத்து இடம்பெற்றுள்ளது. ஆனால், அதில் இருக்கும் குறியீடு தான் அல்டிமேட்டாக இருக்கிறது. அறிக்கையின் பின்னால் அண்ணா படம் பொறித்த அதிமுக கொடி. கொடியின் நடுவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்ஙணம் ‘கழக பொதுச்செயலாளர்’ என்று முடிவுரை எழுதப்பட்டுள்ளது. இதன்மூலமாக அதிமுகவை கைப்பற்றப்போகும் முடிவில், தான் உறுதியாக இருப்பதை எடப்பாடிக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். எடப்பாடி தரப்பு எதிர்வினைக்கு சசிகலா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் களமே எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*