கண்டெய்னர்களில் பாஜக தேர்தல் அலுவலகம் : களமிறக்கும் குஷ்பு..!!

கண்டெய்னர்களில் பாஜக தேர்தல் அலுவலகம் : களமிறக்கும் குஷ்பு..!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சினிமா பாணியில் நடிகை குஷ்பு தேர்தல் பணிமனையை அமைத்துள்ளார்.

கண்டெய்னர்களில் பாஜக தேர்தல் அலுவலகம் : களமிறக்கும் குஷ்பு..!!

தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்ட தொடங்கியதையடுத்து, தேர்தலில் மக்களின் வாக்குகளை பெருவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, தேர்தல் நேரங்களில் ஆங்காங்கே, தற்காலிக தேர்தல் அலுவலங்கள் அமைத்து, அந்த பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

கண்டெய்னர்களில் பாஜக தேர்தல் அலுவலகம் : களமிறக்கும் குஷ்பு..!!

அந்த வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் பா.ஜ.க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு, அந்த தொகுதியில் தேர்தல் பணிமனை ஒன்றை அமைத்துள்ளார். இதற்காக, சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. அருகில், குஷ்பு தனது தற்காலிக தேர்தல் பணிமனையை அமைத்து உள்ளார். குஷ்பு சினிமா துறையில் இருந்ததாலோ என்னவோ, தனது தேர்தல் அலுவலகத்தை சினிமா பாணியில் முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.

கண்டெய்னர்களில் பாஜக தேர்தல் அலுவலகம் : களமிறக்கும் குஷ்பு..!!

இந்தநிலையில், 4 கண்டெய்னர்களை கொண்டு தேர்தல் பணிமனையை செட் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தேர்தல் அலுவலக முகப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க தேர்தல் அலுவலகம் என்ற பெயருடன் குஷ்புவின் படமும் இடம்பெற்றுள்ளது. 4 கன்டெய்னர்களில் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கன்டெய்னரும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு கழிவறை மற்றும் இருக்கை வசதி கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு கன்டெய்னரில் நடிகை குஷ்புவின் அலுவலகம் செயல்படுகிறது.

இதையடுத்து, மற்ற 3 கன்டெய்னர்களில் உள்ள அறைகளிலும் தொகுதி நிர்வாகிகளுக்கு தனித்தனி அறை வசதி செய்யப்பட்டுள்ளது. தனியாக தொலைபேசி, இணையதள வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிமனை வளாகத்தில், பெரிய சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து கூட்டம் நடத்தும் வகையில் இருக்கை வசதிகளும் உள்ளது.

கண்டெய்னர்களில் பாஜக தேர்தல் அலுவலகம் : களமிறக்கும் குஷ்பு..!!

இந்தநிலையில், தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் புதுப்புது யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், சினிமா துறையில் இருந்து வந்த நடிகை குஷ்புவோ, செட்டிங்களுக்கு பெயர் போன சினிமா பாணியிலேயே தேர்தல் பணிமனையை அமைத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*