காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி: அசிங்கப்படுத்திய திமுக..! நடந்தது என்ன?

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி: அசிங்கப்படுத்திய திமுக..! நடந்தது என்ன?

திமுக- காங்கிரஸ் இடையான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்ட அழுத சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி: அசிங்கப்படுத்திய திமுக..! நடந்தது என்ன?

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே, தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒருபக்கம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் படுபிஸியாக உள்ளார்கள். திமுகவைப் பொருத்தவரை 180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும்,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, முஸ்லிம் லீக் 3 என திமுக தொகுதி பங்கீடு செய்துள்ளது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி: அசிங்கப்படுத்திய திமுக..! நடந்தது என்ன?

இதையடுத்து, மதிமுகவுடனும் காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது. இருந்தாலும் மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்று மதிமுக கூறிவருகிறது. காங்கிரஸ் கட்சியும் அமைதிகாக்கிறது.

இதனால் நாளைக்குள் பேச்சுவார்த்தை முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உடன் கைகோர்த்துள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் தங்களுக்கு 27 தொகுதிகள் மற்றும் ஒரு எம்பி சீட் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் திமுகவோ 22 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக கூறியுள்ளது. இந்தநிலையில், இதை காங்கிரஸ் தரப்பு மறுத்துவரும் நிலையில், திமுகவும் விடாப்பிடியாக 22 தொகுதியிலேயே பேச்சுவார்த்தையே முடக்கியுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி: அசிங்கப்படுத்திய திமுக..! நடந்தது என்ன?

இந்தநிலையில், கடந்த சில நாட்களாகவே கே.எஸ் .அழகிரி அண்ணா அறிவாலயம் சென்று வருகிறார். இதைத் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தும் வருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது இறுக்கமான முகத்தோடு, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறிவருகிறார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி: அசிங்கப்படுத்திய திமுக..! நடந்தது என்ன?

இதையடுத்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ள நிலையில், செயற்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறைவு என்பதையெல்லாம்விட, அங்கே நம்மை நடத்தும் விதம்…. என கூறியவாறு கண்கலங்கி உள்ளார். பின்னர், கண்ணாடியை கழற்றி கண்ணீரை துடைத்த கே.எஸ்.அழகிரி, இனி நான் பேச்சுவார்த்தைக்கு அண்ணா அறிவாலயம் செல்ல மாட்டேன். நீங்களே செல்லுங்கள். நான் இறுதியில் வந்து கையெழுத்து போட வருகிறேன் என்று கூறியுள்ளார். திமுக செயல்பட்டால் காங்கிரஸ் தலைவர் அழுதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*