காட்பாடியில் புதிய வேட்பாளரை களமிறக்கும் அதிமுக, திமுக: ஆடிப்போன மாமன் -மச்சான் உறவுள்ள அமைச்சர்!

அதிமுக, திமுக என்று எதிரெதிர் அணியில் இருந்தாலும் மாமன், மச்சான் உறவு மாதிரியே இருந்து வருகிறார்களாம் அதிமுகவின் அமைச்சர் வீரமணியும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும்.

காட்பாடியில் புதிய வேட்பாளரை களமிறக்கும் அதிமுக, திமுக: ஆடிப்போன மாமன் -மச்சான் உறவுள்ள அமைச்சர்!

இதில், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் துரைமுருகன் தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்வாகி வருவதற்கும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வீரமணி இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்வாகி அமைச்சரானதற்கும் மாமன், மச்சான் உறவுதானாம்.

காட்பாடியில் துரைமுருகனுக்கு எதிராக டம்பியாக அதிமுக வேட்பாளரை களமிறக்குவாராம் வீரமணி. அதே போல, ஜோலார்பேட்டையில் வீரமணிக்கு எதிராக டம்பியான திமுக வேட்பாளரை களமிறக்குவாராம் துரைமுருகன். இவர்களோட இந்த மாமன் மச்சான் உறவு தலைமைக்கு தெரிந்துவிட்டதாம்.
இனிமேலும் இப்படியொரு வெற்றி தேவையில்லை என்று இரு கட்சி தலைமையும் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

காட்பாடியில் புதிய வேட்பாளரை களமிறக்கும் அதிமுக, திமுக: ஆடிப்போன மாமன் -மச்சான் உறவுள்ள அமைச்சர்!

இனிமேல், மாமன், மச்சான் உறவு தொடர முடியாதபடி இரு கட்சி தலைமையும் இருவருக்கும் அப்படி ஒரு உத்தரவை போட்டிருக்கிறது.

துரைமுருகனை தோற்கடிச்சாதான் அமைச்சர் பதவியெல்லாம்னு வீரமணிகிட்ட சொல்லியிருக்கிறது அதிமுக மேலிடம். வரும் தேர்தலில் வீரமணியை தோற்கடித்தல்தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் எதிர்பார்க்கும் அமைச்சரை நியமிக்க முடியுமென்று திமுக மேலிடம் உத்தரவு போட்டிருக்கிறது என்கிறார்கள்.

மேலும், அமைச்சர் வீரமணியை எதிர்த்து போட்டியிட அவருக்கு இணையாக வலிமையாக களத்தில் இறங்கும்படியாக முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரை தயார்படுத்தி இருக்குதாம் திமுக. அதேபோல், துரைமுருகனை எதிர்த்து போட்டியிட வலிமையான ஆளை தேடிக்கொண்டிருக்குதாம் அதிமுக.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*