காணாமல் போயுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அரசியல் உள்நோக்கத்துடன் அகற்றாமல் இருக்கக் கூடாது -உயர் நீதிமன்றம்

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளைக் கண்டுபிடித்து பாதுகாக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காணாமல் போயுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அரசியல் உள்நோக்கத்துடன் அகற்றாமல் இருக்கக் கூடாது -உயர் நீதிமன்றம்

மனுவை விசாரித்த நீதிபதிகள், “சென்னையைச் சுற்றியிருந்த பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. நீர்நிலைகள் வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போல முக்கியமானது என்பதை உணர்ந்து மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும், அவற்றைப் பாதுகாக்க முனைய வேண்டும். சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணாமல் போயுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அரசியல் உள்நோக்கத்துடன் அகற்றாமல் இருக்கக் கூடாது -உயர் நீதிமன்றம்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. அதேபோல அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அரசு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட எந்தக் காரணங்களுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது” என்றனர். காணாமல் போன நீர்நிலைகளைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

About Vengai Vetri 273 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*