கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்: முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தேர்வு

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்: முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தேர்வு
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்: முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தேர்வு

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி 1967 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை 1967ஆம் ஆண்டிலிருந்து திமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

தற்போது அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செ.தாமோதரன், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்றுமுறை வெற்றிபெறவர்.

  1. 2001 ஆம் ஆண்டு 55958 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
  2. 2006 ஆம் ஆண்டு 55493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
  3. 2011ஆம் ஆண்டு 94123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்: முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தேர்வு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாசத்தியக்குரியவர் செ.தாமோதரன். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் செ.தாமோதரனுக்கு வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர். 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தார்.

அதிமுகவில் செ.தாமோதரன் வகித்த பதவிகள்

டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிளை கழக செயலாளரக இருந்தவர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாக இருந்துள்ளார். 1986-2012ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். 2012-2014 ஆம் ஆண்டு வரை கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்.தற்போது கழக அமைப்புச்செயலாளர் இருக்கிறார்.

About Vengai Vetri 297 Articles
Vengai Vetri Tamil News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*